தற்போது தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வருகிறது, அதில் சில படங்கள் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. நான்கு பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள கண்ணகி படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார், ஷான் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. கண்ணகி படத்தில் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.
மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்
அம்மு அபிராமி தனது திருமணத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது அம்மா ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து விடுகிறார். மற்றொரு கதையில் ஷாலின் ஜோயா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தனது பாய் பிரண்டுடன் லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வருகின்றனர். மற்றொரு கதையில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்க, இதனை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று அவரும் அவரது காதலரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மற்றொரு கதையில் வித்யா பிரதீப் தனது கணவர் தனக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் எனவும் நான் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றும் நீதிமன்றத்திற்கு செல்கிறார். இப்படி நான்கு பெண்களுக்கும் நான்கு வித்தியாசமான வாழ்க்கையில் வாழ்த்து வருகின்றனர். இறுதியில் இந்த நான்கு கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது. இதில் ஒவ்வொரு பெண்களும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர், அதனை எவ்வாறு சரி செய்தனர் என்பது தான் கண்ணகி படத்தின் கதை.
பிறப்புறுப்பு. எல்லாம் பிறப்புறுப்பு!#கண்ணகி #Kannagi pic.twitter.com/8C81oyUdpx
— Gurubaai (@ItsGurubaai) December 12, 2023
சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் நான்கு பிரச்சனைகளை கையில் எடுத்து அதை அதை சரியான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். வீட்டில் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் ஒரு பெண், ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதாவது ஒரு காரணத்தால் தட்டி போவதால் நான் எத்தனை பேரை தான் கணவனாக பார்ப்பது என்று கேட்கிறார், இதேபோல படம் முழுவதும் ஏகப்பட்ட சிறப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கீர்த்தி பாண்டியனுக்கு படத்தில் வசனங்கள் இல்லாவிட்டாலும் தனது நடிப்பு திறமையை இந்த படத்தில் காட்டியுள்ளார். மேலும் இவரை வைத்து கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத படி இருந்தது.
தனது இந்த வாழ்க்கை தான் தொலைந்து விட்டது, அடுத்த வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று வித்யா பிரதீப் ஒரு விவாகரத்தான பெண்ணின் வலிகளை தனது நடிப்பின் மூலம் காட்டியுள்ளார். சிகரட், தண்ணி என தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த படி வாழும், திருமணத்தில் நம்பிக்கை இல்லாதா ஒரு அராத்து பெண்ணாக ஷாலின் ஜோயா தனது கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டுள்ளார். படத்தில் நடித்திருந்த மற்ற சப்போட்டிங் கேரக்டர்களும் படம் முழுக்க தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர், இவர்களில் மயில்சாமி மற்றும் தனியாக தெரிகிறார்.
பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பற்றி பேசி இருக்கும் இயக்குனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். தனால் முடிந்த அளவிற்கு தான் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார். ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. சில இடங்களில் டப்பிங் இல்லாமலும், லைவ் லொக்கேஷன்களிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதல் பாதியில் நான்கு பெண்களையும், அவர்களின் வாழ்வியலை சொல்லும் விதம் நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் அதனை கொண்டு சென்ற விதம் படத்திற்கு சற்று தொய்வை தருகிறது. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்த கதையில் சில இடங்களை கட் செய்து இருக்கலாம். முன்பு சொல்லி இருந்தது போல கிளைமாக்சில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காதபடி இருந்தாலும், அந்த ட்விஸ்ட் சிலருக்கு புரியாமல் போகவும் வாய்ப்புள்ளது. மேலும் சில காட்சிகள் புரிந்து விட்டாலும் நீண்ட நேரம் வருவதால் சலிப்பை தட்டுகிறது. கண்ணகி - வென்றால்.
மேலும் படிக்க | 73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ