விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் மோதும் கார்த்தி!

அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் கார்த்தியின் 'சர்தார்' படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 25, 2022, 05:58 PM IST
  • 'விருமன்' படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது.
  • 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகுகிறது.
  • சர்தார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் மோதும் கார்த்தி! title=

தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  இவரது முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, பின்னர் இவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற படங்கள் ரசிகர் பட்டாளத்தை இவருக்கு உருவாக்கியது.  தற்போது இவர் நடிப்பில் வரிசையாக மூன்று படங்கள் வெளியாக இருக்கிறது.  முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள 'விருமன்' படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது.  அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பிரமம்மாண்ட திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகுகிறது. 

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதான் - லோகேஷ் கனகராஜ்!

அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படமான 'சர்தார்', இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.  கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த், இளவரசு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.  அஜித் நடிக்கும் 'ஏகே 61' படத்தையும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. 

சர்தார் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே61 படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அஜித் படத்துடன் கார்த்தியின் படம் மோத போகிறது.  இதேபோல ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான அதே தேதியில், கார்த்தி நடித்த கைதி படமும் வெளியாகி இருந்தது.  கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு தற்போது பெரிய நடிகர்களின் படங்களுடன் தன் படத்தையும் வெளியிட திட்டமிடுகிறார் கார்த்தி.

மேலும் படிக்க | அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்? உறுதி செய்த அட்லீ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News