ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம், ஜப்பான். இந்த படத்தில், நடிகை அனு இமானுவேல், நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், “யார் அந்த ஜப்பான்?” என்ற இண்ட்ரோ வீடியோ வெளியானது. இதில், கார்த்தியின் கதாப்பாத்திரம் குறித்த சிறிய முன்னோட்டம் காண்பிக்கப்பட்டது.
“யார் அந்த ஜப்பான்?”
படத்தில் கார்த்தியின் பெயர் ஜப்பான் என்பது சமீபத்தில் வெளியான இண்ட்ரோ வீடியோ மூலம் தெரிய வந்தது. காவல் துறை அதிகாரியாக, ஊர் சுற்றும் இளைஞராக, ஐ.டி.ஊழியராக இதுவரை கார்த்தியை பார்த்து வந்த ரசிகர்கள், இந்த படத்தில் அவரை வித்தியாசமான அவதாரத்தில் பார்க்க உள்ளனர். அந்த வீடியோ முழுவதும் “யார் அந்த ஜப்பான்?” என ஒவ்வொரு ரவுடிகளும் படத்தின் நாயகனான ஹீரோவை தேடுவது போல அந்த முன்னோட்ட வீடியோவில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது ஜப்பான் படம், ரவுடியாகவும் கொள்ளையனாகவும் வலம் வந்த ஒருவனின் கதையாக இருக்கும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்த நபர்யார் தெரியுமா?
மேலும் படிக்க | விஜய் நடிக்கும் லியோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்!
உண்மை கதை:
தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 4 மாநில காவல்துறை அதிகாரிகளை அல்லோலப்படுத்திய கில்லாடி திருடன், திருவாரூர் முருகன். சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் மிகப்பெரிய திருட்டு நடந்தது. இந்த திருட்டுக்கு காரணமானவர்கள் யார் என திணறிய போலீஸார், இதற்கும் திருவாரூர் முருகனுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடித்தனர். அது மட்டுமல்ல, நகரங்களில் உள்ள பெரிய பங்களா வீடுகளில் கொள்ளையடிப்பதற்கு மாஸ்டர் மைண்ட் ஆக வலம் வந்தவராம், திருவாரூர் முருகன். தற்போது, இவரது கதையை அடிப்படையாக வைத்துதான் ஜப்பான் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யார் அந்த திருவாரூர் முருகன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலே திருடர்களுள் போலீஸாரின் தலை மீதே ஏறி அமர்ந்த திருடன், திருவாரூர் முருகன். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா என 4 மாநிலங்களில், இவர் மீத 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூர் முருகன், செல்போனை பயன்படுத்த மாட்டாராம். நம்பிக்கைக்குரிய ஒரு குழுவை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களை வைத்து திருடுவதுதான் முருகனின் வேலை. திருட்டின் போது, இவரது குழுக்கள் வாகி-டாகியில்தான் பேசிக்கொள்வராம். கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் மிகப்பெரிய திருட்டு ஒன்று நடந்தது. இதில் சில கொள்ளையர்கள் சிக்கினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூர் முருகனுக்கும் அந்த கொள்ளைக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோய் காரணமாக இறந்து விட்டாதாக கூறப்பட்டது. தற்போது இந்த கதையை வைத்துதான் ஜப்பான் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
க்ளைமேக்ஸ் மாற்றமா?
திருவாரூர் முருகனின் முடிவை போலவே, ஜப்பான் படத்தில் கார்த்தியின் க்ளைமேக்ஸ் இருக்க வேண்டாம் என எண்ணிய இயக்குநர் அதை மட்டும் மாற்ற நினைத்தார். ஆனால் நடிகர் கார்த்தியோ, “எனக்காக எல்லாம் எந்த கதையையும் மாற்ற வேண்டாம். இருப்பது அப்படியே இருக்கட்டும்” என கூறிவிட்டாராம். இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை தொடர்ந்து, ஒரு தரப்பு ரசிகர்கள் திருவாரூர் முருகனை பற்றி தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றுமொரு தரப்பினராே..”அப்போ அழுகை வரும் எண்டிங்கா..” என இப்போதே படத்தில் என்ன நடக்க போகிறது என்று கணித்து விட்டனர்.
மேலும் படிக்க | ரோபோ ஷங்கரின் மகள் நடிகை இந்திரஜா ஷங்கரின் வருங்கால கணவர் இவர் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ