"கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

Last Updated : Jun 13, 2016, 01:00 PM IST
"கபாலி' திரைப்படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. title=

"கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

படத்தின் "டீஸர்' அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சாதனை செய்தது. ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று பாடல்கள் வெளியிடப்பட்டன.

படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாத இறுதியில் "கபாலி' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கபாலி' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரஜினியின்  இளைய மகள் சௌந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Trending News