லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு!

Kamal Haasan Net Worth:  நடிகர் கமல்ஹாசன் சொகுசு வீடு, கார்கள், பங்களா என பல விலையுர்ந்த பொருட்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Nov 14, 2023, 08:25 AM IST
  • கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 177 கோடி.
  • பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார்.
  • லண்டனில் ஒரு வீடு வாங்கியுள்ளார் கமல்.
லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு! title=

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர்.  கமல்ஹாசனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகிறார்.  கமல் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டுள்ளார்.  கடந்த ஆண்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை பெற்றது.  கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம் ஆகும்.  இந்த படத்தின் வெற்றி கமல்ஹாசனை மீண்டும் சம்பளத்தில் உயர கொண்டு சென்றது.  

மேலும் படிக்க | ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?

கமல்ஹாசன் சொத்து மதிப்பு

2022 ஆம் ஆண்டு அரசிடம் அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.177 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.  இதில் ரூ.17 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் அடங்கும்.  கமலுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன. சென்னையில் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.25 கோடி ஆகும். மேலும் சென்னையை சுற்றி உள்ள அவருக்கு சொந்தமான வணிக இடங்கள் மற்றும் பிற ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும். கமலுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது.  இங்கிலாந்தில் கமல்ஹாசனின் பெயரில் ஒரு சொத்து உள்ளது. கமல் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி லண்டனுக்கு செல்வதால், அங்கு முதலீடு செய்துள்ளனர். லண்டன் வீட்டில் அவர் செய்த முதலீடு ரூ.3 கோடி.

சொகுசு கார்கள்

கமல்ஹாசன் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களை வைத்துள்ளார்.  இதன் மொத்த மதிப்பு 3.69 கோடி ஆகும். மேலும், கமல்ஹாசன் டொயோட்டா பிராடோ, மிட்சுபிஷி பஜேரோ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ 220 கார்களையும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு ஹம்மர் எச்3 மதிப்பு ரூ. 80 லட்சம், ரேஞ்ச் ரோவர் எவோக் ரூ. 60 லட்சம் மற்றும் ஆடி ஏ8 எல் மதிப்பு 1.19 கோடி.  

கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.  சமீபத்தில் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் Thug Life படத்தின் புரமோ வீடியோ வெளியானது.  யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.  ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.  இது தவிர இந்தியன் 2 படத்தில் இருந்தும் ஒரு வீடியோ வெளியானது.  நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் 3வது பாகமும் தற்போது தயாராகி வருகிறது.  அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தை வெளியிட முயற்சி செய்து வருகின்றனர்.  இந்த படங்களை தொடர்ந்து Project K மற்றும் வினோத் படங்களில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஐஷூ..! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News