கமல் படத்தில் ரஜினி பட கனெக்‌ஷன்! - தீயாய் பரவும் அப்டேட்!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் இசை குறித்து சுவாரஸ்யமான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Mar 14, 2022, 07:15 PM IST
  • கமல் நடித்துள்ள ‘விக்ரம்’ ஜூன் -3 ஆம் தேதி ரிலீஸ்
  • விக்ரம் படத்துக்கு அனிருத் இசையமைப்பு
  • கமலுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில் நடித்துள்ளனர்
கமல் படத்தில் ரஜினி பட கனெக்‌ஷன்! - தீயாய் பரவும் அப்டேட்! title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 100 நாட்கள் நடந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விஸ்வரூபம்-2 . அதன் பின்னர் அவரது எந்தப் படமும் திரைக்கு வரவில்லை. அந்த வகையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

                                                                               Vikram film

லோகேஷின் முந்தைய படமான மாஸ்டருக்கு இசையமைத்த அனிருத்தே இப்படத்துக்கும் இசையமைக்கிறார். தமிழின் டாப் 4 நடிகர்களாக அறியப்படுபவர்களுள் ரஜினி, விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இசையமைத்துவிட்ட அனிருத், கமல்ஹாசன் படங்களுக்கு மட்டும் இசையமைக்காமல் இருந்துவந்தார். கமலின் விக்ரம் படம் வாயிலாக அதையும் தற்போது நிறைவுசெய்துள்ளார் அனிருத். இந்நிலையில் விக்ரம் படத்தின் இசையமைப்பு குறித்து சுவாரஸ்யத் தகவல் கசிந்துள்ளது. அந்த வகையில், இப்படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இதனை ஈடுசெய்யும் விதமாக பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க | விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?!

ரஜினி நடித்த பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வில்லன்களாக நடித்திருந்தனர். இதில், ரஜினிக்காகத் தனியாக தீம் மியூசிக் உருவாக்கப்பட்டிருந்ததுபோலவே நவாசுதீன் மற்றும் விஜய்சேதுபதிக்கும் தனித் தனியே தீம் மியூசிக் வழங்கப்பட்டிருந்தது. சிங்கார் சிங் தீம் மற்றும் ஜித்து தீம் என்ற பெயரில் வெளியான அவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அதைப்போலவே விக்ரம் படத்திலும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலுக்குத் தனித்தனியாக தீம் மியூசிக் போடப்பட்டுள்ளதாகவும் படத்தில் அவை தனிக் கவனம் பெறும் எனவும் சொல்லப்படுகிறது.

லோகேஷின் ‘கைதி’யில் இளையராஜாவின் ‘ஆசை அதிகம் வச்சு’ மற்றும் மாஸ்டரில் ‘கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கவிடப்பட்டிருந்தன. லோகேஷின் இந்தப் படத்தின் டைட்டில் டீசரிலும் இளையராஜா இசையமைத்த விக்ரம்(1986) படத்தின் டைட்டில் சாங்க் டச்-அப் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பற்றி எரியும் சர்ச்சைப் பதிவு: ஷாருக்கானை சீண்டுகிறாரா அட்லி?!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News