பஞ்சாபி மற்றும் இந்தி மொழி படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமானவர், மங்கள் தில்லான். இவர், கடந்த சில மாதங்களாக புற்றுநாேயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி திரையுலக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜுனூன் தொடரின் நடிகர்..
தொலைக்காட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த தொடர், ஜுனூன். ஹாரர்-த்ரில்லர் தொடரான இது, இந்தி மொழியில் எடுக்கப்பட்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர், ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், மங்கள் தில்லான். அவர், இந்த சீரியலில் சமர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
உயிரிழப்பு..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் மங்கள் தில்லான், பஞ்சாப்பில் உள்ள லூதியானா மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது உடல் நிலை சில நாட்களாக மோசமானதையடுத்து, நேற்று (ஜூன் 11,ஞாயிறு) உயிரிழந்துள்ளார். இவர் இறந்த செய்தி பாலிவுட் வட்டாரங்களில் உள்ள திரை பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | Ileana: தாயாக இருக்கும் இலியானாவின் நெடுநாள் காதலர் யார் தெரியுமா..?
தில்லான் நடித்த பிரபல படங்கள்-தொடர்கள்..
பிரபலமான தொடரான ஜுனூன் மட்டுமல்லாது. புனியாத், தி கிரேட் மராத்தா, நூர்ஜஹான் போன்ற பல தொடர்களில் இவர் நடித்துள்ளார். அது மட்டுமன்றி, பியார் கா தேவ்தா, ரன்பூமி, ஸ்வர்க் யஹான் நரக் யஹான், விஸ்வத்மா, தில் தேரா ஆஷிக், ட்ரைன் டு பாகிஸ்தான் ஆகிய படங்கள் இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனைகளாக அமைந்தன.
பன்முக திறமைசாலி..
மங்கள் தில்லான், நடிகராக மட்டுமன்றி பன்முக திறமை கொண்டவராக திரையுலகில் வலம் வந்துள்ளார். இவர், பஞ்சாபி மொழியில் வெளியான சில படங்களுக்கு கதை எழுதவும் செய்திருக்கிறார். சில படங்களை இயக்கி, தயாரித்தும் வழங்கி இருக்கிறார். இவரது மறைவு, திரையுலகிற்கே பெரிய இழப்பு என பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்கள் இரங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ