லியோ படத்துடன் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் 'ஆண்டனி' பட டீசர்!

Antony Movie Teaser: ஜோஷியின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'ஆண்டனி' படத்தின் டீஸர் விஜய்யின் லியோ படத்துடன் வெளியாக உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2023, 02:09 PM IST
  • ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகி உள்ள ஆண்டனி படம்.
  • ஆண்டனி படத்தின் டீசர் 19 அக்டோபர் வெளியாகிறது.
  • கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லியோ படத்துடன் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் 'ஆண்டனி' பட டீசர்! title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான 'ஆண்டனி' படத்தின் டீசர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்துடன் அக்டோபர் 19 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது.   புகழ் பெற்ற இயக்குனர் ஜோஷி இயக்கிய 'ஆண்டனி' படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்து சுஷில் குமார் அகர்வால், நிதின் குமார் மற்றும் ரஜத் அகர்வால் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமாக படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

antony

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை.. வைரலாகும் போட்டோ

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஆன்டனி' படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 23, 2023 அன்று வெளியாகிறது. ஆண்டனி மற்றும் அவரது நண்பர்கள் சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில், ஆண்டனி எதிர்பாராத விதமாக ஒரு கொலை செய்து விடுகிறார்.  இதன் பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிகள் நிரம்ப சொல்லி இருக்கும் படம் தான் ஆண்டனி.  இப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ், "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஜோஷி உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் முந்தைய படமான 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சினிமா வாழ்க்கையின் மைல்கல்லாகவும் அமைந்தது, 'ஆண்டனி' நிச்சயம் உங்களை ஏமாற்றாது என்று கூறினார்.

இயக்குனர் ஜோஷியின் படத்தில் முதன் முறையாக நடிக்கும் கல்யாணி பிரியதர்சன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், "படத்தின் கதைக்களம் தனித்துவமானது, வழக்கத்திற்கு மாறானது மற்றும் அதே நேரத்தில் நம்மை இணைக்கக்கூடிய உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. மேலும் பார்வையாளர்கள் என்னை இதுவரை எப்படி பார்த்தார்கள் என்பதற்கு நேர்மாறாக எனது பாத்திரம் உள்ளது. ஜோஷி சார் ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார், இதைவிட த்ரில்லான ப்ராஜெக்ட்டை நான் கேட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அப்படிப்பட்ட அனுபவமுள்ள இயக்குனருடன் வழக்கத்திற்கு மாறான படமொன்றில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது மற்றும் உணர்வுபூர்வமாக இந்த படம் எதிரொலிக்கும்" என்று கூறினார்.  

ரெனதீவின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் மனதைக் கவரும் இசை, ஷியாம் எடிட்டிங் மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆண்டனி படம் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  ஆண்டனி படத்தின் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது, மேலும் படம் நவம்பர் 23 வெளியாகிறது.

மேலும் படிக்க | லியோ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்! படக்குழுவினருக்கு நடந்த துயர சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News