ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Jigarthanda DoubleX OTT Release Date: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ஓடிடியில் வெளியாக உள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2023, 04:04 PM IST
  • கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
  • இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
  • இதனை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?  title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியான படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக (Jigarthanda DoubleX OTT Release) ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:

தமிழ் திரையுலகின் தனித்துவ இயக்குநர்களுள் ஒருவராக விளங்குபவர், கார்த்திக் சுப்புராஜ். இவர், சமீபத்தில் இயக்கியிருந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே 2014ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் முன்கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம், தியேட்டரில் ரிலீஸான போது நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. 

ஓடிடியில் ரிலீஸ்..

திரையரங்கில் வெளியான படங்கள் ரிலீஸிற்கு பிறகு சில நாட்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி, தற்போது வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில், இம்மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது. 

ஜிகர்தண்டா படத்திற்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில், மலைவாழ் மக்கள் பலர் நடித்துள்ளனர். இதில் நடிப்பதற்காகவே, கிட்டத்தட்ட 40க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது, ஒரு புதிவித முயற்சியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அது மட்டுமன்றி, பேய் படங்களில் நடித்து மக்களிடம் பெரிதாக ஷைன் ஆகாமல் இருந்த ராகவா லாரன்ஸ், இந்த படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்துள்ளார். வழக்கமாக எஸ்.ஜே.சூர்யாவிற்குதான் அந்த பெயர் கிடைக்கும். ஆனால் இந்த முறை அவரை ராகவா லாரன்ஸ் முந்திக்கொண்டார். 

மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

ஹிட் ஆன பாடல்..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு சந்தோஷ் நாராணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் “மாமதுர அன்னக்கொடி..” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இதனை, சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடியிருந்தார். லிரிக்கல் வீடியோவாக வெளியான போதே இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ரீல்ஸ் ஆப்ஷனில் இப்பாடலுக்குதான் அனைவரும் நடனம் ஆடி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இதுவரை இயக்கியுள்ள பெரும்பாலான படங்களுக்கு சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னர் வெளியான ஜிகர்தண்டா படத்திற்கும் அவரே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் உருவான படங்களுடன் சேர்த்து பாடல்களும் மாஸ் ஹிட் அடித்துள்ளன. 

ஜிகதர்தண்டா படத்தின் வசூல்..

இந்த வருட தீபாவளிக்கு ஜிகதர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் சேர்ந்து, இன்னும் சில படங்களும் வெளியானது. அதில், கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் ஒன்று. இப்படமும் ஒரு அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. ஆனால், இதற்கு ரசிகர்கள் அவ்வளவாக வரவேற்பை அளிக்கவில்லை. அதனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்தான் தீபாவளி வின்னர் என்று கூறப்பட்டது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், இதுவரை ரூ.80 கோடி ரூபாய்க்கு மேல் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

படக்குழு..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஷைன் டாம் சாக்கோ, கார்த்திகேயன் சந்தானம், கதிரேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | நயன்தாராவுக்கு ஆடம்பர காரை பரிசாக கொடுத்த விக்கி! காரின் விலை என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News