Jayam Ravi Birthday: நடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தனது மனைவியை பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி:
தமிழ் திரையுலகில் ‘சாக்லேட் பாய்’ கதாநாயகனாக வலம் வருபவர், ஜெயம் ரவி (Jayam Ravi). பிரபல படத்தொகுப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான இவர் ‘ஜெயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். சொல்லப்போனால் இந்த படத்தை இயக்கியதே அவரது அண்ணன் மோகன் ராஜாதான். இந்த படம், இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, தற்போது அண்ணனும்-தம்பியும் திரையுலகில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவி, திறமையான நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு, இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், மக்கள் மனத்தில் நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் அனைவரையும் கலங்கடித்த 6 விவாகரத்துகள்!
மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பினை பெற்றார். ஆனால், தனியாக ஹீரோவாக நடித்திருந்த அகிலன், இறைவன் ஆகிய படங்களும், இந்த ஆண்டு வெளியான சைரன் படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
ஜெயம் ரவி திருமணம்:
இதற்கிடையே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ஆர்த்தி என்பவரை காதலித்துவந்த இவர் கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். ரவி -ஆர்த்திக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து:
ஜெயம் ரவி - ஆர்த்தி திருமண வாழ்க்கை சுமூகமாகவும் நன்றாகவும் சென்றுக் கொண்டு இருந்த நிலையில் தற்போது நேற்று தனது மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார். அவரது இந்த முடிவு திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
Grateful for your love and understanding.
Jayam Ravi pic.twitter.com/FNRGf6OOo8
— Jayam Ravi (@actor_jayamravi) September 9, 2024
ஜெயம் ரவி பிறந்தநாள்:
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதினிடையே தற்போது ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயம் ரவி சொத்து மதிப்பு:
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரின் மொத்த சொத்து மதிப்பு 75லிருந்து 80 கோடி ரூபாய்வரை இருக்கும் என்றும்; சில தொழில்களில் அவர் முதலீடு செய்து அதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆடி கார் வைத்திருக்கும் அவர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை சொந்தமாக வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க | வேட்டையன் முதல் சிங்கிள்: தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! மனசிலாயோ பாட்டு எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ