Oscars 2021 போட்டியில் இருந்து வெளியேறியது ‘ஜல்லிக்கட்டு’, உள்நுழைந்தது ‘பிட்டு’

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான போட்டிகளுக்கு தேர்வான ஜல்லிக்கட்டு திரைப்படம், போட்டியில் இருந்து வெளியேறியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 07:01 PM IST
  • எஸ்.ஹரீஷின் Maoist என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஜல்லிக்கட்டு
  • ஆர்.ஜெயக்குமாருடன் எஸ்.ஹரீஷும் திரைக்கதை எழுதியுள்ளார்
  • ஜல்லிக்கட்டு மலையாள திரைப்படம் 93வது ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது
Oscars 2021 போட்டியில் இருந்து வெளியேறியது ‘ஜல்லிக்கட்டு’, உள்நுழைந்தது ‘பிட்டு’ title=

புதுடெல்லி: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான போட்டிகளுக்கு தேர்வான ஜல்லிக்கட்டு திரைப்படம், போட்டியில் இருந்து வெளியேறியது. 

93வது ஆஸ்கர் போட்டிக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு என்ற மலையாள மொழித் திரைப்படம் இறுதி பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகவில்லை.

பொதுவாக பாலிவுட் திரைப்படங்களே ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டு வந்தது. அந்த வரம்பை மீறி சீறி நுழைந்தது ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான அந்நிய மொழி பிரிவில், போட்டிக்கு ஜல்லிக்கட்டு தேர்வானதே அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Also Read | நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?

தற்போது இந்தியா சார்பில், இயக்குநர் கரிஷ்மா தேவ் துபேவின் 'பிட்டு' குறும்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 9 பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு இடம் பெறவில்லை.  

முன்னதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட குழு, ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பலாம் என தேர்வு செய்தது.

ஆஸ்கரில் நுழைய தகுதி வாயந்த திரைப்படமான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தை இயக்கியவர் பிரபல மலையாள சினிமா இயக்குநர் லிஜோ ஜோஸ் (Lijo Jose Pellissery). 2019ம் ஆண்டு வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் கதை ஒரு எருமையைச் (buffalo) சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அது வெட்டப்படுவதற்கு முன்னதாக உரிமையாளரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தின் வழியாக ஓடுகிறது. 

Also Read | இந்த இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கிறாரா ரஜினி?

இந்த பின்புலத்தில் சுவாரசியமாக அமைக்கப்பட்ட திரைக்கதை அனைவரின் மனதையும் கவர்ந்து ஆஸ்கர் பட்டியலில் இடம் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எஸ்.ஹரீஷின் (S Hareesh) மாவோயிஸ்ட் (Maoist) என்ற  சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆர்.ஜெயக்குமார் மற்றும்  எஸ்.ஹரீஷ் திரைக்கதை எழுதியுள்ளார்.

ஆஸ்கரின்: 93 வது அகாடமி விருதுகள் விழா 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளன.

Also Read | விஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News