போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் 'விருமன்' பாடல்? - கிளம்பியது புதிய சர்ச்சை!

முத்தையா இயக்கத்தில் கார்த்தி  நடித்துள்ள விருமனில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று சர்ச்சையைச் சந்தித்துள்ளது.  

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Aug 13, 2022, 06:48 PM IST
  • முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்
  • யுவன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்
  • இதன் பாடல் ஒன்று சர்ச்சையாகி உள்ளது.
போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் 'விருமன்' பாடல்? - கிளம்பியது புதிய சர்ச்சை! title=

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கஞ்சாப் பூவு கண்ணால எனும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலின் வரிகளை கருமாத்தூர் மணிமாறன் எழுதி உள்ளார். இந்நிலையில் இப்பாடல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்பாடலின் தொடக்க வரியாக அமைந்துள்ள கஞ்சாப் பூ எனும் சொல்தான் இந்தச் சர்ச்சைக்கான மையப் புள்ளியாக அமைந்துள்ளது.

அதாவது பாடலில் இடம்பெற்றுள்ள கஞ்சாப் பூவு எனும் சொல் போதைப் பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அச்சொல்லை நீக்கவேண்டும் எனவும் நெட்டிசன்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ‘அனைத்து மக்கள் அரசியல் கட்சி’ நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா இப்பாடலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்றுதான் பாடல் எழுத வேண்டுமா???? 

கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது.அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும்‌.கஞ்சாப் பூ என‌ப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான். ஏற்கனவே "கஞ்சா வெச்ச கண்" எனப் பாடல் வெளியாகி உள்ளது.அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது.இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன்,அபின்,...இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும். எதை ஒழிக்க வேண்டுமோ அதன்‌ பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.திரைப்படத் துறையினர் மக்கள் நலன்‌ குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்‌.அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற‌ வார்த்தைகளை  பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ‘ஃபினிஷர்’னா யாருனு தெரியுமா.. தோனியைச் சீண்டினாரா ஸ்ரீகாந்த்?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இதனை ஒழிக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விருமன் படப் பாடல் மூலமாக இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் படிக்க | கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டுகள்- லிஸ்ட்டுல இத்தனை பேட் இருக்கா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News