தனுஷை ஒரு தலையாக காதலிக்கும் ‘அந்த’ நடிகை..! யார் தெரியுமா..?

Dhanush: நடிகர் தனுஷை தனக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு நடிகை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 23, 2023, 01:18 PM IST
  • கோலிவுட் உலகின் முன்னணி நடிகர் தனுஷ்.
  • இவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு நடிகை பேசியுள்ளார்.
  • அந்த நடிகை யார் தெரியுமா?
தனுஷை ஒரு தலையாக காதலிக்கும் ‘அந்த’ நடிகை..! யார் தெரியுமா..?  title=

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், தனுஷ். கோலிவுட்டை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகிலும் தனுஷ் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று பல கோடி ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவரை ஒருதலையாக காதலிக்கும் ஒரு நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா? 

ரேகா நாயர்:

கோலிவுட் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர், ரேகா நாயர். இவர், செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். இதையடுத்து, சில நாட்கள் ரேடியோ ஜாக்கியாகவும் இருந்துள்ளார். ரேகா நாயர் சிர தமிழ் தாெலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவை மெகா ஹிட் சீரியல்களாகவும் மாறியுள்ளன. 

ரேகாவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம், இரவின் நிழல். இதில், அவர் ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர், இப்படத்தில்அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் கிளம்பியது. இதையடுத்து, சர்ச்சைக்கே பெயர் போன திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயரின் அந்த காட்சியை கடுமையான வார்த்தைகளை உபயாேகித்து விமர்சித்திருந்தார். இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, கைகலப்பு வரை சென்றது. இதிலிருந்து ரேகா நாயர் மிகவும் பிரபலமாக மாறினார். 

மேலும் படிக்க | ஒரு வருடம் கழித்து ஓடிடியில் வெளியான திருச்சிற்றம்பலம் படம்..! எந்த தளத்தில் பார்ப்பது?

Rekha Nair

“தனுஷை பிடிக்கும்..”

ரேகா நாயர், சமீப காலமாக பல ஊடகங்கள் நடத்தும் நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு சேனலிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “தனுஷ் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நானே அவரை திருமணம் செய்திருப்பேன்..” என்றும் ரேகா நாயர் குறிப்பிட்டார். 

“தனுஷிடம் கூறினேன்..”

ரேகா, தனக்கு தனுஷை சந்திக்க ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது அவரிடம் “எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்” என கூறியதாகவும் அந்த நேர்காணலில் அவர் பேசியுள்ளார். அவரிடம் இதை பலரும் சொல்லியிருப்பதால் தான் கூறியதையும் அவர் சகஜமாக எடுத்துக்கொண்டதாக ரேகா குறிப்பிட்டுள்ளார். ரேகாவின் தனுஷ் மீதான இந்த ஒரு தலை காதல் விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ரேகா நாயரின் வாழ்க்கை:

கோலிவுட்டில் சைலண்டாக இருக்கும் சில நடிகைகளின் முகம், அவர்களின் குரல் வெளியில் தெரிய ஆரம்பித்த உடன்தான் தெரியவரும். அது போன்ற ஒரு நடிகை, ரேகா நாயர். இவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதாம். திருமணமாகி 1 வருடத்திற்குள்ளாகவே விவாகரத்து நடந்துள்ளது. ரேகாவிற்கு 18 வயது இருக்கும் போது முதல் குழந்தை பிறந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புதான், ரேகா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது 37 வயதாகும் ரேகா, கடந்த 20 வருடங்களில் தான் எத்தனையோ விஷயங்களை பார்த்து விட்டதாகவும் தற்போது கார், வீடு என வாழ்வதாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். முடியாது என்பது இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News