கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக தொடர் போரட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது. இதனால் போலீசாரும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சூட்டு கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலம் கடும் கண்டனங்கள் பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி பயணம் செய்வதற்கு முன்பாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், மேலும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினால் எனக்கு பெரும் மகிழ்ச்சி எனவும் கூறினார்.