இசைஞானி இளையராஜாவின் 79ஆவது பிறந்தநாள் இன்று. அவர் இசைத்துறைக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய தொண்டு எண்ணிலடங்காதவை. அதையும் தாண்டி தமிழ்நாட்டிற்குள் இந்தி நுழையாமல் தடுக்கும் வித்தையையும் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் இளையராஜா.
1960கள் முதல் 80கள் வரை இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்தது. திமுக ஆட்சிக் கட்டிலில் அமர முக்கிய காரணமாகவும் இந்தி எதிர்ப்பு அமைந்திருந்தது. தமிழ்நாட்டிற்குள் ஹிந்தி நுழையாமல் இருக்க திமுக அளவிற்கு வேலை செய்தவர்களுள் ராஜாவும் ஒருவர். எந்த ஒரு மொழியும் கலை இல்லாமல் செழுமை அடையாது. பாடல்கள் மூலம் அந்த கலை அழியாமல் காப்பாற்றி இந்தியை ஓரம் கட்டியவர் ராஜா.
மேலும் படிக்க | அனிருத்தை அழ வைத்த நடிகர் கமல்ஹாசன்...காரணம் என்ன?
70களுக்கு முன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ரேடியோவில் இந்திப் பாடல்கள்தான் ஒலிக்கும். கிராமத்து பெரியவர்கள் பர்மன்களைப் பற்றி பேசுவார்கள். முகமது ரஃபி பற்றி பேசுவார்கள். இந்த வறட்சியை மாற்றி எட்டுத்திக்கும் தமிழ் மண்ணின் இசையை பரவச் செய்தவர் ராஜா. 76 முதல் 91 வரை ஒட்டுமொத்த தமிழ் பாடல் உலகையும் தனது கைக்குள் வைத்திருந்தார்.
இதில் ராஜாவில் பங்கு என்ன என்கிறீர்களா? அன்னக்கிளி, முள்ளும் மலரும், 16 வயதினிலே, கரகாட்டக்காரன் பாடல்கள் வரவில்லை என்றால் இந்திப் பாடல்கள் கேட்கும் பழக்கம் தமிழ்நாடு முழுக்க தொடர்ந்திருக்கும். அது இந்திப் படங்கள் பார்க்க வழி வகுக்கும். இந்திப் படங்கள் பார்க்க மக்கள் இந்தி கற்பார்கள். அல்லது படம் பார்த்தே இந்தி கற்றிருப்பார்கள். மொத்தத்தில் வட மாநிலங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தமிழ்நாட்டில் இந்தி வேரூன்றி இருக்கும். இந்தி வந்திருந்தால் தமிழ் குறைந்திருக்கும். இவையெல்லாம் நடக்காமல் பாதுகாத்தவர் ராஜா.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் கதையை நிராகரித்த பாகுபலி நாயகன்?
இவையெல்லாம் அதீத கற்பனை என்று நினைக்கலாம். ஆனால் இவை கடந்த காலத்தின் நிகழ் சாட்சியங்கள். இந்தி திணிப்பை ராஜா எதிர்க்காவிட்டாலும் இந்தி ஆக்கிரமிப்பை தடுத்திருக்கிறார். ஆனால் ராஜா இதையெல்லாம் தெரிந்துதான் செய்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe