Watch: ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு’ டிரைலர் வெளியீடு!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Last Updated : Feb 25, 2020, 03:23 PM IST
Watch: ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு’ டிரைலர் வெளியீடு! title=

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம்  ‘தாராள பிரபு’. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். 

இந்த படத்திற்கு  ‘தாராள பிரபு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  ‘தாராள பிரபு' திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான் நடித்து வருகிறார். விந்தணு தானத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Trending News