பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்புவுடன் ஹன்சிகா - இந்த படத்தின் புரோமோஷனுக்காகவாம்

பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப் போட்டியில் ஹன்சிகா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 9, 2022, 11:58 AM IST
  • பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டியில் ஹன்சிகா
  • சிம்பு - ஹன்சிகா நடித்த படம் இம்மாதம் ரிலீஸாகிறது
  • பட புரோமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாராம்
பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்புவுடன் ஹன்சிகா - இந்த படத்தின் புரோமோஷனுக்காகவாம் title=

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் தமிழ் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 67 நாட்களைக் கடந்துள்ளது. 14 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த ஷோவில் இப்போது டாப் 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ளனர்.

மேலும் படிக்க | பீஸ்ட் எந்த கதையின் காப்பியும் இல்லை; புதிதும் இல்லை - நெல்சன் திலீப்குமார்

வைல்டு கார்டு என்டிரியாக வந்த ரம்யா பாண்டியன், நிரூப், பாலா மற்றும் தாமரை ஆகியோர் பைனல் ரேஸில் உள்ளனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அபிராமி மற்றும் ஜூலி ஆகியோர் கடந்த சில நாட்களில் இரவு நேர எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் இது புதிய நடைமுறையாக இருந்தது.

இதுவரை சிம்பு முன்னிலையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள், மக்கள் முன் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு விடை கொடுத்தனர். ஆனால், ஜூலி மற்றும் அபிராமி ஆகியோருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் நீண்ட நாட்கள் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்தபோதும், பிக்பாஸ் டீம் அவர்களை புறவாசல் வழியாக வெளியேற்றியுள்ளது. 

டி.ஆர்.பி ரேட்டிங்கை மனதில் வைத்து இப்படியான முடிவை பிக்பாஸ் டீம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியை இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ள பிக்பாஸ் அல்டிமேட் குழு, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. சர்பிரைஸாக பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப் போட்டியில் ஹன்சிகா கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக ஹன்சிகா சிம்புவுடன் இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்களாம். 

மேலும் படிக்க | குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை - மகேஷ்பாபு நிதியுதவி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News