கவுதம் கார்த்திக், STR கூட்டணியில் உருவாகும் திரில்லர் திரைப்படம்!!

கவுதம் கார்த்திக், சிம்பு கூட்டணியில் உருவாகும் அதிரடி திரில்லர் திரைப்படம்!!

Last Updated : Apr 21, 2019, 02:17 PM IST
கவுதம் கார்த்திக், STR கூட்டணியில் உருவாகும் திரில்லர் திரைப்படம்!! title=

கவுதம் கார்த்திக், சிம்பு கூட்டணியில் உருவாகும் அதிரடி திரில்லர் திரைப்படம்!!

ஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்பு - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்துக்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைக்க சிம்பு வெளிநாடு சென்றுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கன்னடத்தில் மஃப்டி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் சிம்பு -கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாகவும் படத்தைத் தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Trending News