பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மஹேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ

விஜய் டிவி பிக் பாஸ் போட்டியாளர் மஹேஸ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு என்று ஒரு போஸ்ட் போட்டு உள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 14, 2022, 02:22 PM IST
  • நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட்.
  • மஹேஸ்வரியின் போஸ்ட் தற்போது வைரல்.
  • ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மஹேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், நிவாஸினி, ஜனனி, அசீம் மற்றும் தனலட்சுமி போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் நேற்று இந்த போட்டியில் இருந்து விஜே மஹேஸ்வரி வெளியேறியுள்ளார். ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ள மஹேஸ்வரி தன்னுடைய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அவர் கூறியதாவது., எனக்கு அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சி தான் வருத்தம் ஒன்றும் இல்லை. இப்போது தான் தெரிந்துகொண்டேன் எவ்வளவு அன்பை நீங்கள் காட்டியுள்ளீர்கள் என்று. என்னுடைய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.

ரசிகர்களிடம் நன்றியை தெரிவித்த மஹேஸ்வரியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News