துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய சிவாங்கி - குக் வித் கோமாளியில் அட்ராசிட்டி

ஹே சினாமிகா பட புரோமோஷனுக்காக குக் வித் கோமாளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துல்கர்சல்மான், சிவாங்கியுடன் அட்ராசிட்டி செய்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 09:07 AM IST
  • துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய சிவாங்கி
  • இந்த வார குக் வித் கோமாளியில் அட்ராசிட்டி
  • இணையத்தில் வைரலாகும் புரோமோ
துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய சிவாங்கி - குக் வித் கோமாளியில் அட்ராசிட்டி  title=

விஜய் டிவியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2 சீசன்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், 3வது சீசனும் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட், செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாகவும், பாலா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் கலக்கி வருகின்றனர். 

கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, அந்தோணி தாசன் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். வாரம் வாரம் வித்தியாசமான கான்செப்ட் மற்றும் கெட்டப்புகளில் போட்டியாளர்களும், கோமாளிகளும் கலக்கி வரும் இந்த புரோகிராமுக்கு ஹே சினாமிகா படக்குழுவினர் இந்த வாரம் வருகை தந்துள்ளனர். ஹீரோ துல்கர் சல்மான் மற்றும் ஹீரோயின் அதிதி, இயக்குநர் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | இனிமேல் இதை செய்ய மாட்டேன் - யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்

அவர்களின் வருகையால் ஒட்டுமொத்த குக் வித் கோமாளி செட்டே மேலும் கலகலப்பாகியுள்ளது. குறிப்பாக, சிவாங்கி அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். துல்கரின் தீவிர ரசிகையான அவர், குக் வித் கோமாளி செட்டில் அவரைப் பார்த்ததும் சிவாங்கியால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சும்மா இருப்பாரா என்ன? உடனே துல்கருடன் அட்ராசிட்டியில் ஈடுபடத் தொடங்கினார் சிவாங்கி. அவருடன் டூயட், பைக் ரைடிங் என கலகலப்பாக குக் வித் கோமாளியில் கலக்கியுள்ளார்.

மேலும், துல்கருடன் ஒரு சின்ன சீனையும் ரீகிரியேட் செய்திருக்கிறார் சிவாங்கி. இந்த புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. துல்கருடன் சிவாங்கி செய்யும் சேட்டை கலகலப்பாக இருக்கிறது. மேலும், துல்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் துல்கரின் ஜாலியான கேரக்டரால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக சிவாங்கி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சிம்புவை இயக்கும் ஐஸ்வர்யா? டுவிஸ்ட் கொடுக்கும் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News