டான் படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன படக்குழு!

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா காட்சிகள் நிறைவடைந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2021, 02:05 PM IST
டான் படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன படக்குழு! title=

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

இந்த படத்தில் இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் நடிக்கிறார். மேலும் லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் படத்தில் எஸ்ஜே சூர்யா, ஆர்ஜே விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் டான் (Don) படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ALSO READ: டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். முன்னதாக விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இந்த படம் தொடர்பாக மேலும் ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி டான் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உற்சாகமுடன் ஒரு செல்ஃபி போட்டோவை பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்.

 

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டாக்டர் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வசூல்ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News