கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு... டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்!

நடிகர் கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 24, 2022, 08:55 AM IST
  • கமல் சமீபத்தில் ஹைதராபாத் சென்று நேற்றிரவு சென்னை திரும்பினார்.
  • இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் பங்கேற்று வருகிறார்.
  • கமல் தற்போது, சினிமா, அரசியல், பிக்பாஸ் என பம்பரமாக சுற்றி வருகிறார்.
கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு... டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்! title=

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கிளம்பின. இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் இன்று காலை வீடு திரும்பினார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு பரிசோதனைக்கு சென்றிருந்தார். லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற கமல்ஹாசன், இன்று காலை 6.30 மணியளவில் இல்லம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | அடச்சீ.....குளிக்கிறதை எட்டிப்பார்த்த அமுதவாணன்! பிக்பாஸ் கொடுத்த எச்சரிக்கை

நடிகர் கமல்ஹாசன் மூன்று நாள்களுக்கு முன், ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்தைச் சந்தித்தார். தொடர்ந்து, ஹைதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

அதாவது, நேற்றிரவு சென்னை திரும்பியவுடன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். 

கமல்ஹாசன் தற்போது, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பிலும் அவர் தொடர்ந்து கலந்துகொள்கிறார். நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை சென்னையில் உற்சாகமாக கொண்டாடிய கமல்ஹாசன், சினிமா, அரசியல், பிக்பாஸ் என தொடர்ந்து பல பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 

இந்தியன் 2 படத்திற்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளது. 

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் ஆகியோர் தற்போது இணைய உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை அடுத்து, கமல்ஹாசன் திரைப்படங்களில் இனி அதிகம் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | விஜய்க்கு அடுத்த பிரச்னை.... அபராதம் விதித்தது போக்குவரத்து காவல் துறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News