அசுரன் மற்றும் ஆடுகளம் என இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ள வெற்றி மாறன், எதார்த்த வாழ்வியலை மக்களின் உணர்களோடு திரையில் மொழியில் காட்டக்கூடியவர். இவரின் படத்துக்காக தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் வெற்றிமாறன், விடுதலை படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகளில் முழுமூச்சாக இறங்க இருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
மேலும் படிக்க | நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதலில் சந்தித்த இடம்!
அதற்கு அடுதப்படியாக இளைய தளபதி விஜய் உடன் சேர்ந்து பணியாற்ற விரும்பும் வெற்றிமாறன், விஜய் எதிர்பார்க்கும் வகையில் கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறாராம். ஏற்கனவே ஒரு கதையை விஜய்க்கு வெற்றிமாறன் கூறியிருந்தபோதும், அந்தக் கதையில் உடன்பாடு ஏற்படவில்லையாம். இதனால் புதிய கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம்.
இளைய தளபதி விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் ஜோடி சேருகிறார் விஜய். பெரிய கேங்ஸ்டர் படமாக தளபதி 67 உருவாக இருக்கிறது. அண்மையில் பேட்டி ஒன்றிலும்கூட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்த இரு படங்களுக்குப் பிறகே வெற்றிமாறன் - விஜய் கூட்டணி இணைய வாய்ப்புகள் உள்ளது என்பதால், இந்தக் கூட்டணியை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது.
மேலும் படிக்க | விக்ரம் எஃபெக்ட்... கமலை பாராட்டிய அவ்வை சண்முகி மேக்கப் மேன் மகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR