‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

விஜய்- 67 படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 22, 2022, 01:55 PM IST
  • இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் 66 உருவாகிவருகிறது.
  • 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்.
  • விஜய் 67 படம் எப்படி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் விளக்கம்.
‘விஜய்- 67’ எப்படிப்பட்ட கதை?- லோகேஷ் கனகராஜின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்! title=

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கிவரும் படத்தில் தற்போது நடித்துவருகிறார். 

அவரது 66ஆவது படமான இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துவருகிறார். மற்றொரு நாயகி பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. விஜய்யுடன் பல நட்சத்திரங்களும் இதில் இணைந்து நடித்துவருகின்றனர். இதனிடையே விஜய்யின் 67ஆவது படத்தை இயக்கப்போவது யார் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இதை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கடந்த சில வாரங்களாகவே திரை வட்டாரத்தில் கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் அத்தகவலை லோகேஷ் கனகராஜே தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.அண்மையில் நடந்த விருது நிகழ்ச்சியொன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். 

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!

 

அப்போது அவரிடம் விஜய் 67 தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், அந்தத் தகவலை மறுக்கவில்லை. அதேநேரம், விஜய் 67 தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவே அறிவிப்பார்கள் எனும் தொனியில் அவர் பேசினார். அதுமட்டுமல்லாமல் விஜய் 67 மாஸாக இருக்குமா அல்லது க்ளாஸாக இருக்குமா  எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதில் கூறிய லோகேஷ், இரண்டுவிதமாகவும் இருக்கும் எனக் கூறினார். அவரது இந்தப் பதிலால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். அத்துடன் இந்தப் பதில் மூலமாக விஜய் 67 படத்தை இயக்கப்போவது லோகேஷ்தான் எனும் தகவலும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News