பிரபல இயக்குநர் லிங்குசாமி தனது புதிய திரைப்படத்தின் பெயரையும், திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார்.
தமிழில் 'ஆனந்தம்', 'ரன்', 'சண்டக்கோழி' 'பையா' போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கியவர் இயக்குனர் என்.லிங்குசாமி.
அவரது அடுத்த திரைப்படமான த வாரியர் தெலுங்கு மற்றும் தமிழ் (Tamil Cinema) என இருமொழிகளில் தயாராகிறது. 'RAPO 19' ஆகும், இது முடிவடையும் தருவாயில் உள்ளது.
@iAksharaGowda @ThisIsDSP @sujithvasudev @anbariv @adityamusic @masterpieceoffl
— Lingusamy (@dirlingusamy)
படத்தின் தலைப்பு முதலில் முடிவு செய்யப்படாததால், அது 'RAPO19' என்று குறிப்பிடப்பட்டது. தற்போது, 'தி வாரியர்' என்ற சக்திவாய்ந்த தலைப்பு கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லுங்குசாமியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோ ராம் பொதினேனி போலீஸ் சீருடையில் கம்பீரமாக இருக்கிறார்.
இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார், அக்ஷரா கவுடா, ஆதி உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் த வாரியர் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார் அபினவ்.
சீனிவாச சில்வர்ஸ்கிரீன் மற்றும் பவன் குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'தி வாரியர்'. இப்படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | 'மருது' படத்தை தொடர்ந்து மீண்டும் முத்தையாவுடன் விஷால்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR