வர்மாவையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்... OTT-யில் வெளியான அடுத்த நொடியில் பதிவேற்றம்!!

பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது..!

Last Updated : Oct 6, 2020, 01:15 PM IST
வர்மாவையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்... OTT-யில் வெளியான அடுத்த நொடியில் பதிவேற்றம்!! title=

பிரபல தமிழ் இயக்குநர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முதலில் உருவான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா நீண்ட இழுபறிக்குப் பின் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது..!

கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் விஜய் தேவகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி (Arjun Reddy). இந்த படம் வர்மா என்ற தலைப்பில் தமிழில் ரீமெக் செய்யப்பட்டது. இயக்குநர் பாலா (Director Bala) இயக்கத்தில் துருவ் விக்ரம், மேகா செளத்ரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வர்மா படத்தின் டீசர் எல்லாம் வெளியாகி படம் ரிலீசுக்கு தயாராகி இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பு, படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த படத்தை ட்ராப் செய்து விட்டு புது டீமை வைத்து இந்த படத்தை இயக்கப் போகிறோம் என அறிவித்தனர்.

இதனை அடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் இணை இயக்குநர் கிரிசாயாவை வைத்து தமிழில் ஆதித்ய வர்மா (Adithya Varma) படத்தை எடுத்து தயாரிப்பு தரப்பினர் ரிலீஸ் செய்தனர். இருப்பினும் நினைத்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. மேலும் ஆதித்ய வர்மா பாக்ஸ் ஆஃபிஸிலும் படுதோல்வியை சந்தித்தது. 

ALSO READ | வைரலாக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தின் மிக அரிதான இந்த புகைப்படம்

இதயடுத்து, பாலாவின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட வர்மா படத்தை OTT-யில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது. அதன்படி Simply South என்ற OTT தளத்தில் அந்த படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பாலாவின் வர்மா திரைப்படம் ஒடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண OTT தளத்தில் 140 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது வர்மா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரிலீசான உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Trending News