தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. அப்போது வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டடது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதால், அவரால் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து பாண்டவர் அணியின் நாசர், விஷால், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா, முகமது ஷபீர் ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, கடந்த மார்ச் 20ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் ஆகிய 5 பதவிகளையும் பாண்டவர் அணியே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக பாக்யராஜ் மீது புகார் கூறப்பட்டது. இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது என 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று நோட்டீஸும் அனுப்பியது. இதேபோல் நடிகர் உதயாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சங்க விதி 13ன்படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி இருக்கிறது. அதனை மீறிய பாக்யராஜ், உதயா ஆகியோர் 6 மாதங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்படுகின்றனர் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata