பிரேமம் பட இயக்குனரின் லட்சியம் இதுதானாம்!

கமல் அல்லது ரஜினிகாந்திற்கு தனது கதை பிடித்துப்போனால் என்னுடைய பல திறமைகளையும் அந்த படத்தில் காட்டுவேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 25, 2022, 06:33 PM IST
  • அல்போன்ஸ் புத்திரன் தற்போது கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
  • பிருதிவிராஜ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
  • சமீபத்தில் விஜய்யை சந்தித்து இருந்தார் அல்போன்ஸ்.
பிரேமம் பட இயக்குனரின் லட்சியம் இதுதானாம்! title=

கடந்த 2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.  இப்படத்தில் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 2015ம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகோயோரை வைத்து பிரேமம் படத்தை இயக்கினார்.  இந்த படம் மலையாள மொழி ரசிகர்களால் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவவேற்பை பெற்றது.  

alphonse puthren

மேலும் படிக்க | விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் மோதும் கார்த்தி!

இயக்குனர் என்பதையும் தாண்டி இவர் தயாரிப்பாளர், நடிகர், ரைட்டர், எடிட்டர் என பல பணிகளை செய்து வருகிறார்.  தற்போது இயக்குனரும், நடிகருமான அல்போன்ஸ் புத்திரன் அவரது ஆசை ஒன்றை தெரிவித்துள்ளார்.  அவர் கூறுகையில், நான் கமல் சார் அல்லது ரஜினி சார் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதை நிச்சயம் அவர்கள் இருவருக்கும் பிடித்துப்போக வாய்ப்புள்ளது.  ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நான் நம்புகிறேன், அதனால் தான் நான் இதுவரை என் வாழ்நாளில் அவர்களை ஒரு முறை சந்திக்கவில்லை.  ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் இருந்து எதிர்காலத்தில் கமல் சாரையோ அல்லது ரஜினி சாரையோ சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் என் கதையை கூறுவேன்.  அந்த கதை அவர்களுக்கு பிடித்துவிட்டால், என்னுடைய பல திறமைகளையும் அந்த படத்தில் போட்டு இவர்களது படங்களையும் நல்லதொரு  பொழுதுபோக்கான படமாக கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து படம் பண்ணுவீர்களா என்று கேட்டதற்கு, 'விஜய் சார் என்னை ஒருநாள் படம் பண்ண அழைப்பார், நான் அதற்காக காத்திருக்கிறேன்' என்று கூறினார்.  இப்போது இவருக்கு முதலில் விஜய் வாய்ப்பு கொடுப்பாரா, கமல் வாய்ப்பு கொடுப்பாரா அல்லது ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுக்கப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  சமீபத்தில் வெளியான பேட்டியில் தனது மகனை வைத்து அல்போன்ஸ் புத்திரன் ஒரு படத்தை எடுக்க முயன்றார் என்று தெரிவித்து இருந்தார்.

ap

மேலும் படிக்க | விக்ரம் படத்தில் கமல் கதாபாத்திரம் இதான் - லோகேஷ் கனகராஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News