சினிமா உலகில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்!!

Last Updated : Oct 2, 2017, 09:46 AM IST
சினிமா உலகில் அறிமுகமாகும் துருவ் விக்ரம்!! title=

தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். 

அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. அந்த வகையில் சமீபத்தில் துருவ்வின் டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார். 

இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார். 

 

 

@dhruv.vikram .. ready to make the leap. #DhruvtobeArjunReddy #E4Entertainment

A post shared by Vikram (@the_real_chiyaan) on

 

Trending News