இளையராஜா இசையில் பாடும் தனுஷ்!

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடவுள்ளார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 06:46 PM IST
இளையராஜா இசையில் பாடும் தனுஷ்! title=

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரியுடன்,விஜய் சேதுபதி,கவுதம் மேனன்,பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.  எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. கோ,கவண் போன்ற படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ALSO READ கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி- தூள் கிளப்பும் வெற்றிமாறன்

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப் படத்துக்காக நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா ஒப்பந்தமாகி பின்னர் விலகினார்.  இவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

viduthalai

இந்த படத்தில் சூரி போலீசாக நடித்துள்ளார் என்பது படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிகிறது. இதனால் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் காடுகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.  இந்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ‘விடுதலை’ படக்குழு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.  அதனடிப்படையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். இதற்கென்று அவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சிறப்பாக பயிற்சி பெற்று தனுஷ் இந்த பாடலை பாடி இருக்கிறார். வெற்றிமாறனுடன் இளையராஜா இணைவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ மீண்டும் இணையும் சூர்யா - பாலா கூட்டணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News