13 ஆண்டுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி ஆகும் பிரபல நடிகை!

தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை சினேகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 3, 2019, 06:41 PM IST
13 ஆண்டுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி ஆகும் பிரபல நடிகை! title=

தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை சினேகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் நடிகர் தனுஷ் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார். மற்றொரு தனுஷ் கதாப்பாத்திரத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்குமுன் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சினேகா ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 13 ஆண்டுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இவர்கள் இணைய இருக்கிறார்கள்.

Trending News