இவளோ லேட்டாவா வர்றது? மாறன் படத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்!

தனுஷின் மாறன் திரைப்படம் நாளை (மார்ச்-11) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2022, 01:15 PM IST
  • மாறன் படம் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
  • ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து மாறன் படமும் ஓடிடி-யில் வெளியாகிறது.
இவளோ லேட்டாவா வர்றது? மாறன் படத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்!  title=

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் நாளை(மார்ச்-11) வெளியாகிறது.  மூன்றாவது முறையாக தனுஷின் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது.  இப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ரிதி வெங்கட், ராம்கி, ஜெயப்ரகாஷ், ஆடுகளம் நரேன், மகேந்திரன், அமீர், இளவரசு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  முதன்முறையாக இப்படத்தில் நடிகர் தனுஷ் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க |  நடிகர் சிம்பு வழக்கு: ஒருலட்சம் அபராதம் விதிப்பு!

சில மாதங்களுக்கு முன் தனது ஒரு கையில் பேனாவை வைத்துக்கொண்டு, மறுகையால் எதிரிகளை அடிக்கும் புகைப்படத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிக்க செய்தது.  மற்ற படங்கள் போலல்லாது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டில் ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது.  பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டனர். 

இப்படத்தின் ட்ரைலர் வெளியானதிலிருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு அதிகரித்தது.  ஏற்கனவே இப்படம் நேரடியாக ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.  இப்படத்திற்கு ஜி.வி,பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.  மார்ச-11ம் தேதி இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் இப்படம் எத்தனை மணிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது 'மாறன்' படம் நாளை மாலை 5 மணியளவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக ஓடிடி-யில் வெளியாகும் படங்கள், சொன்ன தேதியில் இருந்து முதல் நாள் இரவே வெளியாகும் அல்லது காலையில் வெளியாகும்.  படம் வெளியான உடனே ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைவர்.  ஆனால் மாறன் படம் சொன்ன தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  இன்று இரவே படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது நாளை மாலை 5 மணி வரைக்கும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News