D40: ஃபர்ஸ்ட் லுக் - மோஷன் போஸ்டர் அறிவிப்பு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் - நடித்து வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 9, 2020, 05:36 PM IST
D40: ஃபர்ஸ்ட் லுக் - மோஷன் போஸ்டர் அறிவிப்பு! title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் - நடித்து வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதை D40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சில காட்சிகள் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவலை இன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் அரிவாள் உடன் தோன்றியிருக்கிறார் தனுஷ். 

 

 

இது குறித்து ட்வீட் செய்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ், படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருப்பதாகவும், தனுஷ் மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Trending News