குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்

Youtuber இர்ஃபானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது. தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் வெளியிட்டதை தொடர்ந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2024, 02:26 PM IST
  • பார்ட்டி வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்ஃபான் வெளியிட்டுள்ளார்.
  • இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
  • பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்ஃபான் பார்ட்யில் அறிவித்தார்.
குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ் title=

குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் வெளியிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் இர்ஃபான் பிரபலமான யூடியூபர் ஆவார். இவருக்கு அறிமுகமே தேவையில்லை என்று கூற வேண்டும். இவர் பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவை ருசித்து அது தொடர்பான வீடியோக்களை தனது சேனலில் வெளியிடுவார். தற்போது சமீப காலமாக இவர் சற்று வித்தியாசமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அதன்படி பிரபல யூடியூபர் இர்ஃபான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டார் இர்ஃபான். தற்போது அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். 

சமீபத்தில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அந்தக் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பது குற்றமாகும். அதன்படி இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8 வருட இடைவேளைக்கு பிறகு..திரையுலகில் கம்-பேக் கொடுக்கும் பிரபல நடிகர்!

இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் யூடியூபர் இர்ஃபான் குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கு பாலினத்தை அறிவிக்கும் நிகழ்ச்சியை பார்ட்டி வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்ஃபான் வெளியிட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என கூற, அவரது மனைவி தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறுகிறார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்ஃபான் பார்ட்யில் அறிவித்தார்.

அதன்படி அவர் அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதை இவர் கொண்டாடும் விதமாக தான் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் 7 ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே துபாயில் நடைபெற்ற ஜெண்டர் ரிவீல் பார்ட்டியில் பிக் பாஸ் பிரபலம் மாயாவும் கலந்துக் கொண்டுள்ளார். அதனுடன் பயங்கர கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்ட்டியில் கடைசியாக தனக்கு மகள் பிறக்கப் போகிறார் என்பதை அறிந்ததும் இர்ஃபான் ரொம்பவே எமோஷனலாக மாறி கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News