தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு காமன் டிபி வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 19, 2022, 01:19 PM IST
  • நடிகர் விஜய்க்கு வருகிற ஜூன் 22ஆம் தேதி பிறந்த நாள்
  • விஜய்யின் பிறந்த நாளையொட்டி காமன் டிபி வெளியீடு
  • விஜய்யின் காமன் டிபி இணையத்தில் வைரலாகி வருகிறது
தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP! title=

நடிகர் விஜய் வருகிற ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஆனால் தற்போதே அவரது ரசிகர்கள் அவரது பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் வீடியோ கட்டிங், போட்டோக்கள், பேனர்கள், ரைட்-அப்புகள் என சமூக வலைதளமே களைகட்டத் தொடங்கியுள்ளது.

சமீப காலமாகவே நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி காமன் டிபி வெளியிடப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில், இந்த பிறந்த நாளைக்கும் காமன் டிபி உருவாக்கப்பட்டுள்ளது.

பிகில், மாஸ்டர், மெர்சல் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற விஜய்யின் கதாபாத்திரங்கள் சிலைகளாக நிற்பதுபோலவும் அவற்றுக்கு நடுவே விஜய் நிற்பது போலவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. நடுவில் நிற்கும் விஜய் கையில் சுத்தியல், உளி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துள்ளதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது நடிகர் விஜய் தனது கதாபாத்திரங்களைத் தனக்குத் தானே செதுக்கிக் கொண்டதாகக் கூறுவதுபோல இது அமைந்துள்ளது. பின்னணியில் ரசிகர்கள் கையில் மாலையுடன் ஆரவாரத்துடன் நிற்பதுபோலவும் அமைந்துள்ளது.

விஜய்யின் இந்த காமன் டிபி இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.  ரசிகர்கள் பலர் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க |நடிகர் விஜய்- தோனி காம்போவில் அடுத்த படம்? -மிரளும் கோலிவுட்!

விஜய்க்கு இது 48ஆவது பிறந்த நாள். இதையொட்டி 48 சினிமா பிரபலங்கள் விஜய்யின் காமன் டிபியை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் இப்பட்டியலில் உள்ளனராம்.

மேலும் படிக்க | என்னது, ரஜினியின் ஜெயிலர் போஸ்டரே காப்பியா?! நெட்டிசன்ஸிடம் சிக்கிய நெல்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News