எங்கள் தலைமுறை சொதப்பிவிட்டது - மாணவர்களிடம் விக்ரம் வைத்த வேண்டுகோள்

பூமியை பாதுகாப்பதில் எங்கள் தலைமுறையினர் சொதப்பிவிட்டனர் மாணவர்கள் அதனை பாதுகாக்க வேண்டுமென நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 26, 2022, 02:01 PM IST
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் உருவாகவிருக்கிறது
  • படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது
  • படத்துக்கான புரோமோஷன் பணிகள் நடந்துவருகின்றன
எங்கள் தலைமுறை சொதப்பிவிட்டது - மாணவர்களிடம் விக்ரம் வைத்த வேண்டுகோள் title=

அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. இதில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஜான் விஜய், மிருணாளினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான இசையமைத்திருக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் படமானது வெளியாகிறது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

படம் வெளியாக இன்னும் ஒருவாரம் மட்டுமே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதனையொட்டி விக்ரம் பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிவருகிறார்.

அந்தவகையில் கோவையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் ரசிகர்களுடன் கலந்துரையாடுகையில், “கோப்ரா படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். நடிகை ஸ்ரீநிதி, ‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன்pee இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் கடும் உழைப்பாளி. நடிகை மிருணாளினியும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலியாக உணர்வுபூர்வமான வேடத்தில் தன் மொத்த உழைப்பையும் வழங்கி இருக்கிறார்.

Cobra

படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தினை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக இறுதிகட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. அதேபோல் ‘கோப்ரா’ படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.‌

மேலும் படிக்க | பாராதி ராஜாவுக்காக பிரான்ஸில் சிறப்பு பிரார்த்தனை செய்த தமிழின் முன்னணி நடிகை

இந்த பூமி பெரியது. இதனை பாதுகாப்பதில் எங்கள் தலைமுறையை சேர்ந்தவர்கள் சற்று சொதப்பிவிட்டனர். இதனை இன்றைய இளம் தலைமுறையினரான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுகளை அகற்றி, ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். மாணவர்களாகிய உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர்தான்” என்றார்.

மேலும் படிக்க | விடுதலை படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்த மற்றொறு இயக்குனர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News