செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து

Last Updated : Aug 22, 2016, 01:42 PM IST
செவாலியே விருது: கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து title=

தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை 

நட்சத்திரத்திற்கான விருதை அவர் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன், இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கமல்ஹாசன் கொண்டவர். 50 ஆண்டுகள் திரைத்துறையில் காலடி பதித்துள்ள அவர் 4 முறை தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். 

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

‘செவாலியே’ விருது பெற இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கூறியதாவது:-

 

 

Trending News