பிரபல நடிகை திடீர் மரணம்... சிக்கிய தற்கொலை கடிதம் - காதலர் தான் காரணமா?

26 வயதான பாலிவுட் நடிகை வைஷாலி தாக்கர் இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2022, 06:05 PM IST
  • வைஷாலி தாக்கர், சமீபத்தில் வெளியான அக்ஷய் குமார் படத்தில் நடித்திருந்தார்.
  • தற்கொலை கடிதத்தில் முன்னாள் காதலன் குறித்து எழுதியுள்ளார்.
பிரபல நடிகை திடீர் மரணம்... சிக்கிய தற்கொலை கடிதம் - காதலர் தான் காரணமா? title=

இந்தியில் பல்வேறு பிரபல நாடகங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள வைஷாலி தாக்கர், மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஒரு வருடமாக, இந்தூரில் தனது தந்தை, சகோதரர் உடன் வசித்து வரும் வைஷாலி, இன்று காலை அறையில் இருந்து வெளியில் வராததை அடுத்து அவரின் தந்தை கதவை உடைத்து பார்த்துள்ளார். 

அப்போது, வைஷாலி தற்கொலை செய்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் படிக்க | முடியாத நயன்தாரா விவகாரம் - அமைச்சர் என்ன சொல்கிறார்?

2015ஆம் ஆண்டு முதல் நடித்துவரும் இவர், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரின் பிறந்தவர். நடிப்புக்காக மும்பைக்கு சென்ற அவர், பின்னர் ஜெய்ப்பூரில் சிறிது நாள்கள் வசித்து வந்துள்ளார். 

வைஷாலி மரணம் குறித்து இந்தூர் உதவி காவல் ஆணையர் எம்.ரஹ்மான் கூறுகையில்,"வைஷாலியிடம் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் அவர் மன உளச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரின் முன்னாள் காதலரால் துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்" என்றார். 

அவரின் தற்கொலை கடிதத்தை வைத்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மொபைல் போனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவரின் குடும்பத்தினருடைய வாக்குமூலத்தையும் பதிவு செய்து வருகின்றனர். 

உயிரிழந்த வைஷாலி, சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ரக்ஷபந்தன்' திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பெண்ணுக்கு 50 தையல்... இந்த வகை நாயிடம் கவனமாக இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News