பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன்: கறார் காட்டிய கமலஹாசன்

பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து வெளியேறிய நிலையில், எலிமினேஷனில் எந்த சமரசமும் கமல்ஹாசன் செய்து கொள்ளவில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 08:29 AM IST
  • பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன்
  • ஜிபி முத்து வெளியேறினார்
  • போட்டியாளர்களிடம் கறாராக இருந்த கமல்ஹாசன்
பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன்: கறார் காட்டிய கமலஹாசன் title=

பிக்பாஸ் போட்டியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கிறார். கடந்த ஒருவாரமாகவே அப்செட்டாகி இருந்த ஜிபி முத்து, வீட்டில் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவரால் முழுமையாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் அழைத்து பேசியபோது, குடும்பத்தின் மீது ஞாபகம் இருப்பதாக கூறிய ஜிபி முத்து, மகனை பிரிந்து இருக்கவே முடியவில்லை என கண்ணீர் விட்டார். பிக்பாஸ் ஆறுதல் கூறியபோதும், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

மேலும் படிக்க | கோலார் நகர்... விக்ரம் - ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் இதுவா?

வார இறுதி நாளான நேற்று கமல்ஹாசனும், ஜிபி முத்துவிடம் இது குறித்து கேட்டார். அப்போதும், குடும்பத்தையும், மகனையும் பிரிந்து தன்னால் இருக்கவே முடியவில்லை என கூறிய ஜிபி முத்து, தயவு செய்து மக்கள் என்னுடைய நிலையை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். கமலும் ஜிபி முத்துவை சமரசம் செய்ய சில வார்த்தைகள் கூறினார். ஆனால் அவர் அதனை கேட்டுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜிபி முத்துவை அனுமதித்தார் கமல். 

கன்பெஷன் ரூமில் பேசிக் கொண்டிருந்தவாறே வெளியேறினார் ஜிபி முத்து. அவர் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்தபோது, இனி உங்களுக்கு அந்த கதவு திறக்காது, வேறு வழி இருக்கிறது என கூறி முத்துவை அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் முதல் எலிமினேஷனில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பிக்பாஸ் போட்டியாளர் சாந்தி முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News