Bigg Boss Tamil Season 6: டைட்டில் வின்னர் யார்? பரபரப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்

Bigg Boss Tamil Season 6: இரண்டு நாட்களில் பிக் பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டி ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2023, 04:08 PM IST
  • பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்பது பற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றது.
  • பிக்பாஸ் ரசிகர்களில் பெரும்பாலானோர் அசீம் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர்.
  • அசீம் மற்றும் விக்ரமன் சம மதிப்பெண்களுடன் ஒரே நிலையில் உள்ளனர்.
Bigg Boss Tamil Season 6: டைட்டில் வின்னர் யார்? பரபரப்பில் காத்திருக்கும் ரசிகர்கள் title=

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த, ரசிகர்களின் அபிமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் உள்ளது. ஆறாவது பதிப்பாக இப்போது நடந்துவரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. ஒவ்வொரு சீசன் போலவே, இந்த சீசனிலும் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும், சண்டைகளும், சமர்சங்களும், நட்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகளும் அதிகமாக காணப்பட்டன.

இன்னும் இரண்டு நாட்களில் இந்த பிக் பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டி ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வழக்கம் போல் இறுதிப்போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் தமிழ் 6 இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. அசீம் மற்றும் தனாவின் சண்டைகள் இந்த ரேடிங்குக்கு முக்கிய காரணமாக இருந்தன. 

இதற்கிடையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்பது பற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றது. பிக்பாஸ் ரசிகர்களில் பெரும்பாலானோர் அசீம் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர்.

மேலும் படிக்க | Bigg Boss Tamil Season 6: அசீம் - ஷிவின்..இந்த முறை டைட்டில் வின்னர் யார்? 

அசீம் மற்றும் விக்ரமன் சம மதிப்பெண்களுடன் ஒரே நிலையில் உள்ளனர். ஆனால் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கோப்பையை அசீம் தூக்கிவிடுவார் என்று பேசப்படுகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அஸீம் போட்டியை விட்டு வெளியேறுவார் என்று கூட பேசப்பட்டது. அவர் பல இடங்களில் நடந்துகொண்ட விதம் அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. 

பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் அசீம் வெற்றி பெற, அசீமின் ரசிகர்கள் ட்விட்டரில் அவரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல, விக்ரமன் அதிக வாக்கு சதவீதத்தில் முன்னணியில் உள்ளார். 

வாக்கு சதவீதத்தில் அசீம் ரசிகர்களுக்கு விக்ரமன் ரசிகர்கள் கடும் போட்டியை கொடுக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதில் மற்றொரு போட்டியாளரும் இவர்களுக்கு சவாலாக உள்ளார். அவர்தான் ஷிவின். ஷிவின் அசீம் மற்றும் விக்கிரமனை அவ்வளவு எளிதாக வெல்ல விடமாட்டார் என்றும், அவர் இவர்களுக்கு கடும் போட்டியை அளிப்பார் என்றும் கூறபடுகின்றது. 

சமூக ஊடகங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பற்றிய பல தலைப்புகளும் ஹாஷ்டேகுகளும் டிரெண்ட் ஆகி வருகின்றன. பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கான பிரச்சாரத்தில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள். எப்படியும், டிஆர்பி-களை அள்ளிக்குவித்த இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் வெற்றியாளர் யார் என்பது இன்னும் இரு நாட்களில் தெரிந்துவிடும். 

மேலும் படிக்க | மனோஜ்குமார் மஞ்சு - வருண் இணையும் “வாட் த ஃபிஷ்” 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News