பிக்பாஸில் புதிய ட்விஸ்ட்! வீட்டிற்குள் நுழைந்த புகழ் மற்றும் ஸ்ருஷ்டி!

Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐசு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.  இதனால் வீட்டில் உள்ளவர்கள் சோகத்தில் உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2023, 11:12 AM IST
  • பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஸூ.
  • நிக்சன், மாயா குமுறி குமுறி அழுகை.
  • இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸில் புதிய ட்விஸ்ட்! வீட்டிற்குள் நுழைந்த புகழ் மற்றும் ஸ்ருஷ்டி!  title=

Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இரண்டு வாரத்திற்கு முன்பு பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வீட்டில் இருந்து அனுப்பப்பட்டார், அன்றிலிருந்து பிக் பாஸ் வீடு தினசரி சண்டையுடன் தொடங்கி சண்டையுடன் முடிகிறது.  பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.  மேலும் மாயா மற்றும் பூர்ணிமாவின் தலையீடு பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர், இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றும் மாறும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள்X Vs ஜப்பான்: எந்த படம் நல்லாயிருக்கு? எதை முதலில் பார்க்கலாம்?

இந்தநிலையில் இந்த வார எபிசோடுடில் கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியதற்கு தகுந்த விளக்கம் அளித்தார்.  கிட்டத்தட்ட சனிக்கிழமை எபிசோடு முழுவதும் இதனை சுற்றியே இருந்தது.  காரணம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்றும் பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பொய்காரணம் கூறியுள்ளனர் என்றும் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். ரசிகர்களுக்கு புரிய வைக்கும் வகையில் மீண்டும் ஹவுஸ் மேட்ஸ்ஸிடம் விளக்கம் கேட்டு கமல்ஹாசன் பதில் அளித்தார்.  மேலும், பிரதீப் பக்கம் இருக்கும் தவறையும் சுட்டி காட்டினார்.  

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மாயாவின் கேப்டன்சி குறித்து சக போட்டியாளர்கள் பேசினர், இதில் பெரும்பாலானோர் மாயாவின் கேப்டன்சி சரியில்லை என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விட்டார் என்றும் கூறினார். மேலும் யாரும் எதிர்பாக்காத விதமாக இந்த வாரம் ஐஸு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பூர்ணிமா, மாயா, நிக்சன் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். மேலும் அடுத்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக புகழ் மற்றும் ஸ்ருஷ்டி இருந்தனர்.  ஏற்கனவே வைல் கார்ட் என்ட்ரியில் ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், தற்போது புதிதாக மேலும் இரண்டு பேர் நுழைந்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதற்கு முன் வெளிவரவில்லை. ஒருவேளை புகழ் மற்றும் ஸ்ருஷ்டி புதிய படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாயினும் அடுத்தடுத்து ப்ரோமோ அல்லது இன்றைய எபிசோடில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த வாரம் புதிய அறிவிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், இரண்டு வீடும் ஒன்றாக இருக்கலாம் என்றும் பிக்பாஸ் முடிவெடுத்துள்ளார்.  ஏன் இந்த முடிவு என்றும் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | ‘ஜப்பான்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News