Bigg Boss Contestants வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Viral ஆகும் list real-லா fake-கா?

தினமும் போட்டியாளர்களின் வெவ்வேறு பரிமாணங்களைப் பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் நமது பிரச்சனைகளையும் சிறிது நேரம் மறந்துதான் போகிறோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2020, 09:21 PM IST
  • Bigg Boss Tamil-ன் நான்காவது சீசனின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடக்கும்.
  • Bigg Boss 4 போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பற்றிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த பட்டியல் உண்மையல்ல என்றும் கூறப்படுகிறது.
Bigg Boss Contestants வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Viral ஆகும் list real-லா fake-கா?  title=

Bigg Boss Tamil-ன் நான்காவது சீசன் அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கியது. ஒவ்வொரு சீசனையும் போல இந்த சீசனும் பலரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்துள்ளது.

கொரோனா காலத்தில் மக்கள் தங்கள் மனதை சற்று லேசாக்கிக்கொள்ள ஒரு கருவியாக Bigg Boss Tamil-ன் நான்காவது சீசன் இருந்து வருகிறது என்று கூறலாம். தினமும் போட்டியாளர்களின் வெவ்வேறு பரிமாணங்களைப் பார்த்து நாம் நமது இறுக்கங்களையும் நமது பிரச்சனைகளையும் சிறிது நேரம் மறந்துதான் போகிறோம்.

Bigg Boss Tamil-ன் நான்காவது சீசனின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் நடக்கும். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு உள்ளது. வார இறுதியில் கமல் யாரை வீட்டிலிருந்து அழைக்கப்போகிறாரோ என்ற படபடப்பு வீட்டில் இருப்பவர்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

இதற்கிடையில், 'Bigg Boss 4' போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பற்றிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பட்டியலின் படி ரம்யா பாண்டியன், ஆரி, ஜீத்தன் ரமேஷ், ஆறந்தாங்கி நிஷா, சிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் ஒரு வார சம்பளமாய் கிடைக்கிறது.

ALSO READ: Bigg Boss Wild Card Entry அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தவுடன் செய்த வேலை என்ன தெரியுமா?

சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் வேல்முருகன் ஆகியோர் 1 முதல் 1.5 லட்சம் வரை பெறுகின்றனர்.

மீதமுள்ள போட்டியாளர்களான அனிதா சம்பத், கேப்ரியெல்லா சார்ல்டன், சோம் சேகர் மற்றும் ஆஜித் ஆகியோர் ஒரு வாரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Bigg Boss-சுடன் தொடர்புடைய எங்கள் வட்டாரங்களை நாங்கள் தொடர்பு கொண்டபோது, சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த பட்டியல் உண்மையல்ல என்றும் கூறப்பட்டது. Bigg Boss ​​போட்டியாளர்களின் சம்பளம் ரகசியமானது என்றும் சமூக ஊடகங்களில் வைரலாகும் பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

ALSO READ: ‘நிறம் தாண்டி நிஜம் பார்ப்போம்’: Bigg Boss வீட்டில் நிலவாய் ஜொலிக்கும் நிஷா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News