Bigg Boss 6: வைல்டு கார்டு என்ட்ரி..பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த பிரபலமா

Bigg Boss Tamil season 6: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாதை அடுத்து சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 8, 2022, 11:38 AM IST
  • விஜய் டிவி வெளியிட்ட நிழல் படம்.
  • புதிதாக வரும் நபர்.
  • பிக் பாஸில் முதல் Wildcard என்ட்ரி.
Bigg Boss 6: வைல்டு கார்டு என்ட்ரி..பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த பிரபலமா title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ்  6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த போட்டியிலிருந்து இதுவரை மொத்தம் 8 பேர் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த வாரம் எலிமிநேஷனில் இருந்து குயின்சி வெளியேறினார். 8 வாரங்களுக்கு வீட்டில் இருந்த குயின்சி மொத்தம் ரூ 1.60 லட்சம் வரை பெற்றிருக்க கூடும் வீட்டை விட்டு வெளியேறினார். 

மேலும் படிக்க | Bigg Boss Tamil 6: தலைவர் பதவிக்கு போட்டா போட்டி, இப்படி ஒரு டாஸ்க் ஆ..

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார். மேலும் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருப்பதால் இந்த வாரம் கட்டாயம் ராம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது, இதில் மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோர் பங்கேற்று மணிகண்டன் வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது வாரத்தை நெருங்கி விட்டதால், வைல்ட் கார்டு மூலம் யார் என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி குறித்து விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, மேலும் அதில் நிழல் படத்தை வெளியிட்டுஇது யார் என்று கெஸ் பண்ணுங்கள் பார்ப்போம் என்று கேள்வி கேட்டிருக்கின்றனர். அதைக் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பல குவிந்து வருகிறது. அதிகமானோர் அது அஞ்சலியின் புகைப்படம் என்று கூறி வருகின்றனர். 

மறுபக்கம் ஒரு சிலரோ அந்த நிழல் படம் அஞ்சலியின் புகைப்படம் அல்ல. அது சின்னத்திரை நடிகையாக இருந்து வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா உடையது என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பிரபல இசையமைப்பாளர் மகனுடன் சிவாங்கியின் ரொமான்ஸ் பாடல் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News