அமீரை மாற்ற ஐடியா வேணும்? கதறும் பிக்பாஸ் பாவனி

பார்ட்னர் அமீரை மாற்ற ஐடியா வேண்டும் என பிக்பாஸ் பாவனி கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2022, 01:42 PM IST
  • அமீரால் அவதிப்படும் பாவனி
  • அவரை மாற்ற வேண்டும் என நினைக்கிறாராம்
  • பிரியங்கா கொடுத்த எச்சரிக்கை
அமீரை மாற்ற ஐடியா வேணும்? கதறும் பிக்பாஸ் பாவனி title=

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி, 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். நிகழ்சியில் இவருக்கு எதிராக பல விஷயங்கள் நடந்தபோதும், மனம் தளராமல் கடைசி வரை போட்டியிட்டார். வீட்டில் இவரது நண்பர்களாக இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேற, தொகுப்பாளனி பிரியங்காவுடன் கூட்டணி அமைத்தார் பாவனி. வைல்டு கார்டு என்டிரியாக அமீர் வந்தவுடன் இருவரும் ஜோடியானார்கள். 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 5 ஜோடிகள் திருமணமா? தீயாக பரவும் புகைப்படம்

அதன்பிறகு பிக்பாஸ் வீட்டின் ஃபோகஸ் இவர்கள் மீது திரும்பியது. பிக்பாஸ் வீட்டிலேயே பாவனியை பிடித்திருப்பதாக கூறிவிட்டார் அமீர். ஆனால், பாவனி சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்ததுடன், அமீருக்கு எந்த உறுதியையும் கொடுக்கவில்லை. பின்னர் இருவரும் முத்த சர்ச்சையில் சிக்கினார். பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்தபிறகும்கூட இருவரும் ஒன்றாக சுற்றினர். பேட்டிகளிலும் பாவனி மற்றும் அமீர் ஜோடியாக பங்கேற்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavni (@pavani9_reddy)

அமீரின் காதலுக்கு பாவனி ஓகே சொல்லிவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், அவர்கள் இந்த தகவல்களுக்கெல்லாம் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இவரும் ஜோடியாக பங்கேற்றுள்ளனர். முதல் ரவுண்டிலேயே நடுவர்களை வெகுவாக ஈர்த்த இருவரும், அடுத்தடுத்த ரவுண்டுகளுக்கு தயாராகி வருகின்றனர். அமீர் ஏற்கனவே உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பதால், நடனத்தில் வெளுத்து வாங்குவார். இதில் பாவனி நிலைமை தான் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. தனக்கு ஏற்றார்போல் ஆடவைக்க வேண்டும் என்பதற்காக பாவனியை கடுமையாக டிரெய்ன் செய்து வருகிறார் அமீர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பாவனி, அமீரை மாற்ற என்ன புரோசீஜர் சார் எனக் கேட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ‘தம்பி’ என கூறி எச்சரிக்கை செய்துள்ளார். அடுத்தடுத்த வாரங்களில் பாவனி மற்றும் அமீரின் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | தனுஷூடனானா படுக்கையறை காட்சி குறித்த கேட்ட நெட்டிசன் - விளாசிய மாளவிகா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News