திடீரென கர்பமான பிக்பாஸ் பாேட்டியாளர்? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

Bigg Boss: பலருக்கும் பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் தான் கர்ப்ப பரிசோதனை செய்ததாக தெரிவித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Nov 20, 2023, 02:09 PM IST
  • பலருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ்.
  • தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
  • இந்த நிகழ்ச்சியில் உள்ள ஒரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென கர்பமான பிக்பாஸ் பாேட்டியாளர்? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! title=

இந்திய அளவில் இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே மிக அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக இருப்பது, பிக்பாஸ். 100 நாட்கள் இந்த இல்லத்தில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. 18-20 போட்டியாளர்கள் நுழையும் இந்த போட்டியில் திடீரென வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுப்பர். மக்கள் அதிகம் ஆதரிக்கும் ஒரு சிலர் திடீரென வெளியேற்றப்படுவர். இதனால், இந்த பிக்பாஸ் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 

பிக்பாஸ் போட்டி..

ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் நடந்து வரும் போட்டியைத்தான், இந்தியாவிலும் நடத்தி வருகின்றனர். இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் இப்பாேட்டி நடந்து வருகிறது. இதில், இந்தி மொழியில் மட்டும் இப்போட்டி 2007ஆம் ஆண்டு நடைப்பெற்றது. தற்போது இப்பாேட்டியின் 17வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பல ஆண்டுகளாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 

கர்பமாக இருக்கும் போட்டியாளர்..?

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பல முக்கிய போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர், அங்கிதா லோகண்டே. இவர், பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போதே கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், தனது மாதவிடாய் காலம் தவறியதாகவும் இதனால் கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான்..! வைரலாகும் போட்டோ..!

BB

வெளியில் கூறப்படாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் மர்மங்கள்..

பிக்பாஸ் இல்லத்தில் நுழையும் போட்டியாளர்களுக்கு பல ரூல்ஸ்கள் உள்ளன.  செல்போன் எடுத்து செல்லக்கூடாது, போட்டிருக்கும் மைக்கை கழற்ற கூடாது, மைக்கை மறைத்து விட்டு பேசக்கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் அதில் அடக்கம். ஆனால், மக்களிடம் காண்பிக்கப்படும் வீடியோ காட்சிகளை தவிர இன்னும் பல விஷயங்கள் அந்த இல்லத்தில் உள்ளன. இந்த வீட்டில் ஸ்மோக்கிங் ரூம் இருப்பதாகவும், அங்கு சென்று போட்டியாளர்கள் சிகரெட் பிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, அவ்வப்போது இவர்களுக்கு செல்பாேன் பயன்படுத்த அனுமதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி, 45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக்கப்படுகிறது. இது அல்லாமல், சிறிதாக எடிட் செய்யப்பட்ட வீடியாேக்களும் 24*7 ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

தமிழ் பிக்பாஸில் நடப்பது என்ன? 

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 7வது சீசனில் அடியெடுத்து வைத்தது. ஆரம்பத்தில் சில சர்ச்சைகளும் சச்சரவுகளும் சண்டைகளும் இதில் எழுந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக போட்டியே சுவாரஸ்யம் இல்லாமல் சென்று வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், ஐஷூ-நிக்ஸனின் காதல் என இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிறைய நடந்து வந்தன. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்..! வீடியோ வெளியானது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News