வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்

Bigg Boss 7 Tamil Promo Update: இரண்டாவது நாளே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆறு போட்டியாளர்களை வெளியேறியது போல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 2, 2023, 12:55 PM IST
  • இதில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர்.
  • நேற்று முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் டாஸ்குடன் தொடங்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது.
வந்த இரண்டே நாளில் ஆறு பேரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் title=

பிக்பாஸ் சீசன் 7 புதிய ப்ரோமோ அப்டேட்: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது நாளான இன்று அக்டோபர் இரண்டாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7:
பிக்பாஸ் (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி நேற்று முதல் பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். இதில் முதல் நாளில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். அதன்படி இதில் கூல் சுரேஷ் (Cool Suresh), பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு,  விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் நுழைந்துள்ளனர். 

முதல் நாளே செம டாஸ்க்..! 
நேற்று முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் டாஸ்குடன் தொடங்கப்பட்டது. அதன்படி முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் களமிறங்கினார். அவருக்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தவுடன் கேப்டன்ஸி பேட்ஜ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் கையில் கொடுத்தவுடன் ஒரு ட்விஸ்டும் வைக்கப்பட்டது. அடுத்து வரும் போட்டியாளரிடம் 5 நிமிடத்திற்குள் விவாதம் செய்து, அந்த கேப்டன்ஸி பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த விவாதம் முடிவு பெறவில்லை என்றால் அந்த கேப்டன்ஸி தற்போது யாரிடம் இருக்கிறதோ அவரிடமே இருக்கும். இந்த போட்டி காரசாரமாக நடைப்பெற்றது. அதனால் கடைசி ஆளாக வந்த விஜய்க்கு கேப்டன் வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7... இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? - அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!

இரண்டு வீடு கான்செப்ட்: 
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் நேற்று அறிமுகமான போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

புதிய ப்ரோமோ வீடியோ:
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளின் அதாவது இன்றைய தினத்தின் வெளியான ப்ரோமோ வீடியோவில் முதல் கேப்டனாக விஜய் தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் இந்த வார தலைவர் விஜய்யை கவராத போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் பேசி இருக்கிறார். அதில் ஐஸ், நெல்சன், பாவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா என இந்த ஆறு பேரும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் இந்த வீட்டிற்குள் வரும்போது தான் உங்ககிட்ட நான் பேசுவேன் என்றும் இன்னொரு வீட்டில் இருக்கும் அந்த ஆறு பேரும் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த வீட்டை விட்டு போக கூடாது என்று பிக் பாஸ் கூறியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வரும் நாட்களில் தான் என்ன நடக்கப் போகுது என்று தெரிய வரும்.

பிக்பாஸ் வெற்றியாளருக்கு கிடைக்க போகும் பரிசு என்ன? 
பிக்பாஸ் போட்டியில் 7 வது சீசன் போட்டியில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்கும் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதையடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசாக வழங்கப்படும். 

மேலும் படிக்க | முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்...கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News