'டிமான்டி காலனி 2' படத்தில் பிக்பாஸ் 7 போட்டியாளர்! யார் தெரியுமா?

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2 படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடித்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 17, 2023, 05:59 PM IST
  • அருள்நிதி நடித்துள்ள படம், டிமாண்டி காலனி.
  • இதன் டிரைலர் வெளியானது.
  • இதில் பிக்பாஸ் 7 பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்.
'டிமான்டி காலனி 2' படத்தில் பிக்பாஸ் 7 போட்டியாளர்! யார் தெரியுமா?  title=

டிமான்டி காலனி 2 படத்தில் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர்  ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.  இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன்,ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இதில், பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் நடித்திருக்கிறார். 

டிமான்டி காலனி 2:

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம்  'டிமான்டி காலனி 2' .  ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க,  கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.

மேலும் படிக்க | பிக்பாஸை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம்! அடேங்கப்பா..இத்தனை கோடியா!

படத்தில் பிக்பாஸ் பிரபலம்..

தற்போது பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இடம் பெற்றிருப்பவர் வி.ஜே.அர்ச்சனா. பிக்பாஸ் போட்டியில் இவர் வைல்டு கார்டு போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டார். இவர், இதற்கு முன்னர் சில சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். இவர், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளார். இதனை, அர்ச்சனாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

RJ Archana

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அப்போது, படத்தின் நடிகர்கள் அவரவர் கருத்துகளை தெரிவித்தனர். 

இதில் நாயகி பிரியா பவானி சங்கர் பேசுகையில் “உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம், எனக்கு இந்த கதாபாத்திரம் தந்ததற்கு அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதி உடன் இரண்டாவது படம் எனக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். அருண் பாண்டியன் சார் உடன் ஷீட்டில் வீட்டுக்கதைகள் பேசிக்கொண்டிருப்பேன், ஜாலியாக இருந்தது. மீனாட்சி மிக அழகாக நடித்துள்ளார். பாபி சார் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக இந்தப்படம் அமையும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும்” என்று தெரிவித்தார். 

நடிகர் அருண் பாண்டியன் பேசியபோது, “இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பாபி மற்றும் மனோவிற்கு என் நன்றி. இந்தக்கதையை அஜய் சொன்ன போது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரம், நான் ஓகேவா என்று கேட்டேன். நீங்கள் தான் வேண்டும் என்றார். அருள் நிதி ஃபிரண்ட்லியாக இருந்தார். பிரியா என் தோழி, அவருடன் பழகியது வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தந்தது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்” என்றார். 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து விலகும் கமல்? இனி இவருக்கு பதில் ‘அந்த’ நடிகர்தான் தொகுப்பாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News