மீனாட்சி பொண்ணுங்க: வெறுப்பேற்றிய வெற்றி.. ரோஹித்தை போட்டுத்தள்ள போகும் பூஜா?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் (செப். 2) குறித்த அப்டேட்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 2, 2023, 02:21 PM IST
  • இரவு 9.30 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.
  • ஞாயிறு தினத்தன்று மட்டும் இது ஒளிபரப்பப்படாது.
  • இதனை நீங்கள் Zee5 தளத்திலும் காணலாம்.
மீனாட்சி பொண்ணுங்க: வெறுப்பேற்றிய வெற்றி.. ரோஹித்தை போட்டுத்தள்ள போகும் பூஜா? title=

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது அன்றோடு வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருப்பவையாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பூஜாவுக்கு ரங்கநாயகி ஹனிமூன் ஏற்பாடு செய்ய, பூஜா வேறு வழியின்றி ரோஹித்துடன் கிளம்பிப் போகிறாள்.

ஹனிமூன் வந்த பூஜா அங்கேயே ரோஹித்தை கொலை செய்ய முடிவெடுக்கிறாள். ஹனிமூன் முடிந்து வருவதற்குள் தங்கள் ஃபர்ஸ்ட் நைட் முடிந்துவிடும் என்று வெற்றி சொல்ல, அதை கேட்கும் பூஜா டென்ஷனாகிறாள். வெற்றி சக்தியை சேர விடக் கூடாது என்று முடிவெடுக்கிறாள்.

மேலும் படிக்க | பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்

கோவிலில் ஒரு சன்னியாசி சக்தியும் வெற்றியும் வரும் பௌர்ணமிக்குள் ஒன்று சேராவிட்டால் அவர்கள் மண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்ல, மீனாட்சி இது விஷயமாக ரங்கநாயகியிடம் பேச முடிவெடுக்கிறாள்.

ரங்கநாயகி மீனாட்சியின் மேல் கோபத்தில் இருப்பதால், மீனாட்சி பேசும்போது உள்ளே மறைந்திருக்கும் வெற்றி, ரங்கநாயகியின் குரலில், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சம்மதம் என்று சொல்லி விடுகிறான். இது தெரியாத மீனாட்சி, ரங்கநாயகியே ஒப்புக்கொண்டதாக நினைத்து சக்தி வெற்றியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலை எங்கு பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE-5 இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | வெறித்தனமான ரசிகனாக மாறிய விஜய்... அட யாருக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News