Vishal Mayor Priya Issue: மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாமானியன் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் விஷால் அவரது X பக்கத்தில் மழை பாதிப்பு குறித்து பதிவிட்டிருந்தார்.
விஷால்,"அன்புள்ள பிரியா ராஜன் (சென்னை மேயர்) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், உங்கள் குடும்பத்தினருடன், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழையாது மற்றும் மிக முக்கியமாக.
உங்களுக்கு வரம்பற்ற உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமக்கள் என ஒரு வாக்காளராகச் சரிபார்த்தால், நாங்கள் அதே நிலையில் இல்லை. மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா?
2015ஆம் ஆண்டில், துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்வோம், ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதிகள் அனைவரும் வெளியே வந்து நம்பிக்கை மற்றும் உதவிகளை செய்ய விரும்புகிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
மேலும் படிக்க | சென்னை: ஆபத்தான நிலையில் புழல் ஏரி... சுற்றுச்சுவர் சரிந்ததால் சாலைகள் சேதம்
பலரும் இதற்கு பதிவிட்டு வந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் அதற்கு இன்று அதிகாலையில் பதிலடி கொடுத்திருந்தார். அவரின் பல பதிவுகளை இங்கே ஒருங்கே பார்க்கலாம்.
"2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை"
"திமுக பொறுப்புக்கு வந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது"
"படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்"
"செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன"
"2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, சென்னை மாநகராட்சி"
"2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!
அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்" என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க | விளம்பரம் தேடாதீங்க முதலமைச்சரே.... நடவடிக்கை எடுங்க - வானதி சீனிவாசன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ