பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்.. போட்டியாளர்கள் யார்... யார்.?: முழு லிஸ்ட் இதோ.!

Big Boss Tamil Contestant List 2023 Season 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 28, 2023, 04:25 PM IST
  • சம்பளத்தை ரூ 130 கோடியாக உயர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும்.
  • ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்.. போட்டியாளர்கள் யார்... யார்.?: முழு லிஸ்ட் இதோ.! title=

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் முழு விவரம்: தொலைக்காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு ரியாலிட்டி ஷோ உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் முதன் முதலில் தமிழில் பிக் பாஸ் சீசன் தொடங்கப்பட்டது. மற்ற மொழிகளில் இதுவரையில் ஏராளமான சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு வரவேற்பு உச்சத்தில் இருந்தது. அதற்கு காரணம் அந்த கான்செப்ட் தமிழ் மக்களுக்கு புதுமையாக இருந்ததே. ஏற்கனவே மக்களுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றின புரிதல் கொஞ்சம் இருந்தாலும் முதல் முறையாக நமது தமிழில் ஒளிபரப்பாக போகிறது என்பதால் மிகுந்த ஆர்வத்தோடு அதை எதிர் நோக்கினார்கள். ஆர்வத்திற்கு மற்றொரு காரணம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது என்றால் அதில் ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஆறாவது சீசனில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, ஆயிஷா போன்ற போட்டியாளர்கள் இதில் கவனம் ஈர்த்தனர். கடைசியில், சின்னத்திரை நடிகர் அசீம் இந்த பிக் பாஸ் 6 சீசனின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். விக்ரமன் ரன்னர் அப் பட்டத்தை விக்ரமனும் இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை ஷிவினும் பெற்றனர்.

மேலும் படிக்க | 'ஆண்டிப்பட்டி கனவா காத்து' பாடல் 100 மில்லியன் வியூஸ்... பாடகர் செந்தில் தாஸ் நெகிழ்ச்சி!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் ஆண், பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பாவனா, மாகபா ஆனந்த், நடிகைகள் உமா ரியாஸ், ரேகா நாயர், கேபிஒய் சரத், தொகுப்பாளர்கள் பாவனா, கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்த புதிய லிஸ்ட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. மேலும் இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உமா ரியாஸ்கான் மகன் ஷாரீக் ஹுசைன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 7வது சீசனை தொகுத்து வழங்கயுள்ள கமல்ஹாசன் தனது சம்பளத்தை ரூ 130 கோடியாக உயர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓ.கே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட்டில் நடக்கயுள்ள பிக்பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சி, மொத்தம் 106 எபிசோடுகள் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சூர்யா படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம்..வருத்தம் தெரிவித்த உதயநிதி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News